Home கலை உலகம் தான் படித்த பள்ளியிலேயே படப்பிடிப்பு நடத்திய தனுஷ்!

தான் படித்த பள்ளியிலேயே படப்பிடிப்பு நடத்திய தனுஷ்!

490
0
SHARE
Ad

Dhanush-is-back-to-schoolசென்னை, ஏப்ரல் 18 – ‘வேலையில்லா பட்டதாரி’ படத்திற்குப் பிறகு தனுஷ் மீண்டும் வேல்ராஜ் இயக்கத்தில் நடித்துவருகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் முதல் பாதி படப்பிடிப்பு நடந்து முடிந்துவிட்டது. இரண்டாம் பாதி படப்பிடிப்பு தனுஷ் படித்த பள்ளியில் நடைபெற்றுவருகிறது.

தற்பொழுது படப்பிடிப்பு நடைபெற்று வரும் பள்ளியில் தான் தனுஷ் தன்னுடைய பள்ளிப்படிப்பை படித்தார். இப்பள்ளியில் 1-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரையும் படித்திருக்கிறார். தனது சந்தோஷத்தை தனுஷ் அவரின் சமுக வளைத்தளங்களில் டுவிட் செய்திருக்கிறார்.

11092993_1431119733857065_1330050567_nபடத்தில் சமந்தா, எமிஜாக்சன் மற்றும் சதிஷ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தினை தனுஷின் ‘ஒண்டர்பார் நிறுவனம்’ தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இது குறித்து தனுஷ் மற்றும் அனிருத் இருவரும் காணொளி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.