Home கலை உலகம் பிராமணர்கள் மாட்டுக்கறி உண்டதை வேதமே சொல்கிறதே – கமல் சர்ச்சை பேச்சு!

பிராமணர்கள் மாட்டுக்கறி உண்டதை வேதமே சொல்கிறதே – கமல் சர்ச்சை பேச்சு!

662
0
SHARE
Ad

271861-kamal-haasan-at-ficci-frames-2013.jpgசென்னை, ஏப்ரல் 23 – நடிகர் கமல்ஹாசன் இந்து மத புனித நூல்களிலேயே பிராமணர்கள் மாட்டுக்கறி சாப்பிட்டார்கள் என குறிப்பிட்டுள்ளதாக கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில், மகாராஷ்ட்ராவில் மாட்டுக்கறி தடை செய்யப்பட்டிருப்பது குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

அதற்கு பதிலளித்த கமல், “ஒருவர் என்ன சாப்பிட வேண்டும் சாப்பிடக் கூடாது என்று முடிவு செய்யும் உரிமை அவரவரின் தனிப்பட்ட  ஒன்று. அதை அரசாங்கம் முடிவு செய்யவோ கட்டுப்படுத்தும் உரிமையோ கிடையாது”.

#TamilSchoolmychoice

“மாடுகளைக் கொல்வதைத் தடுக்க வேண்டும் என்றால், மீன்கள் உள்பட மற்ற மிருகங்களைக் கொல்வதையும் கண்டிப்பாகத் தடுக்க வேண்டுமே.”

“மேலும், வேத காலத்தில் பிராமணர்கள் மாட்டுக்கறி சாப்பிட்டதாக அவர்களுடைய புனித நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார் கமல்.