கோலாலம்பூர், ஏப்ரல் 27 – பயங்கர வெடிபொருட்களுடன் 12 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் உலு லங்காட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஞாயிற்றுக்கிழமை உலு லங்காட் மற்றும் சிட்டி சென்டரில் போலீசார் அதிரடி சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.
இச்சமயம் ஏராளமான வெடிபொருட்களை காவல்துறையினர் கைப்பற்றினர். இது தொடர்பாக 12 பேர் உடனடியாக கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து ஐஜிபி டான்ஸ்ரீ காலிட் அபு பாக்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இந்தச் சோதனை நடவடிக்கைகள் புக்கிட் அம்மானின் சிறப்புப் பிரிவால் மேற்கொள்ளப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
“கைது செய்யப்பட்டவர்கள் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த திட்டமிட்டிருந்தனர். அவர்களிடம் இருந்த வெடிபொருட்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன” என்றும் தமது சமூக வலைதளப் பதிவில் காலிட் அபுபாக்கர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.