Home நாடு ஈழத்தமிழர்களுக்கு மலேசிய அரசு வழங்கிய 32 லட்சம் ரிங்கிட் எங்கே? -வழக்கறிஞர் ஆறுமுகத்திற்கும்,...

ஈழத்தமிழர்களுக்கு மலேசிய அரசு வழங்கிய 32 லட்சம் ரிங்கிட் எங்கே? -வழக்கறிஞர் ஆறுமுகத்திற்கும், பூச்சோங் முரளிக்கும் இடையே மோதல்

1132
0
SHARE
Ad

Arumugam-lawyer-sliderகோலாலம்பூர், மார்ச் 6 – ஈழத்தமிழர்களுக்கு  மலேசிய அரசு , டத்தோ சரவணன் மூலம் 32 லட்சம் ரிங்கிட்டுக்கான காசோலையை வழங்கியதாகவும், அதை பெற்றுக் கொண்ட தமிழ்ப்பேரவை வாரிய உறுப்பினர் வழக்கறிஞர் ஆறுமுகம் (படம்) அந்தப் பணத்தை என்ன செய்தார் என்றும் பிகேஆர் கட்சியைச் சேர்ந்த முரளி பத்திரிக்கைகளில் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து  காவல் துறை விசாரிக்கவேண்டும் என்று புகாரும் அளித்துள்ளார் முரளி.

இதற்கு பதிலளித்துள்ள வழக்கறிஞர் ஆறுமுகம், அதில் சல்லிக்காசுக் கூட தான் எடுக்கவில்லை என்றும், அந்த 32 லட்சம் வெள்ளிக்கான மாதிரி காசோலை தன் பெயரில் வழங்கப்படவில்லை மாறாக தமிழ்ப்பேரவை பெர்ஹாட்டின் பெயரில் வழங்கப்பட்டது என்றும் இது தொடர்பில் எந்த வழக்கையும் தாம் சந்திக்கத்தயார் என்றும் கூறியிருக்கின்றார்.

#TamilSchoolmychoice

வாரிய தலைவரும்,செயலவை உறுப்பினர்களும் ஆறுமுகத்திற்கு ஆதரவு.

நேற்று இதுகுறித்து செய்தியாளர்களிடம் வாரியத்தலைவர் டாக்டர் ஐங்கரனும்,செயலவை உறுப்பினர்களும் விளக்கமளித்தனர்.

எந்தத்தவறும் செய்யாத வழக்கறிஞர் ஆறுமுகத்திற்கு  நிர்வாகம்  தனது முழு ஆதரவை வழங்குவதாக அவர்கள் தெரிவித்துக் கொண்டனர்.

முன்பகை காரணமா?

தன் மீதுள்ள தனிப்பட்ட பகை காரணமாக இவ்வாறு அவதூறு பரப்பிய முரளி மீதும், பத்திரிக்கை மீதும் தான் வழக்குத் தொடரப்போவதாக ஆறுமுகம் தெரிவித்திருக்கிறார்.

அப்படியே தமிழ்ப் பேரவை பெர்ஹாட்டுக்கு இந்தப் பணம் வழங்கப்பட்டிருந்தாலும் அந்தப் பணம் மலேசிய அரசாங்கத்தின் பணம் என்பதாலும், மலேசியத் தமிழர்களின் சார்பாக அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து வழங்கப்பட்ட பணம் என்பதாலும் அந்தப் பணம் எவ்வாறு செலவிடப்பட்டது என்பதை அறிவிக்க வேண்டியது சம்பந்தப்பட்டவர்களின் கடமையாகும் என்றும் ஒரு சாரார் கருத்து தெரிவித்துள்ளனர்.