கோலாலம்பூர், ஜூன் 20 – இன்று நடைபெற்ற டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பு அணியினரின் ஆதரவுப் பேரணியில் எதிர்க்கட்சியினரும், அரசு சாரா இயக்கப் பிரதிநிதிகளும் அதிக அளவில் கலந்து கொண்டதாக மஇகா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குறிப்பாக, பிகேஆர் கட்சியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் பூச்சோங் முரளி இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளது மஇகாவினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இன்றைய பழனிவேல் ஆதரவுப் பேரணியில் கலந்து கொள்ளுமாறு தனது பேஸ்புக் பக்கத்தில் பூச்சோங் முரளி தனது நண்பர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Comments