Home உலகம் “என் தந்தையின் இறப்புச் சான்றிதழ் கொடுங்கள்”-என்று அமெரிக்காவிடம் பின்லேடன் மகன் மனு.

“என் தந்தையின் இறப்புச் சான்றிதழ் கொடுங்கள்”-என்று அமெரிக்காவிடம் பின்லேடன் மகன் மனு.

816
0
SHARE
Ad

osamsaரியாத்,ஜூலை 20- அமெரிக்காவில் வாஷிங்டன் பென்டகன் ராணுவத் தலைமையகம் மற்றும் நியூயார்க் உலக வர்த்தக மையத்தின் 110-மாடி இரட்டைக் கோபுரத்தின் மீது விமானங்களை மோதி, கடந்த 2001 செப்டம்பர் 11-ந் தேதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 3000 பேர் உயிரிழந்தனர்.

இந்தத் தாக்குதலுக்கு மூளையாக இருந்து செயல்படுத்திய அல்-கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவர் பின்லேடனை அமெரிக்கா தீவிரமாகத் தேடி வந்தது.

ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்குப் பின், பின்லேடன் பாகிஸ்தானில் அப்போதாபாத் என்ற இடத்தில் பதுங்கியிருந்தபோது, கடந்த 2011-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந் தேதி, அமெரிக்க ராணுவம் “ஆபரேஷன் நெப்டியூன் ஸ்பியர்” என்ற பெயரில் ராணுவ நடவடிக்கை எடுத்துச் சுட்டுக் கொன்றது.

#TamilSchoolmychoice

பின்லேடன் கொல்லப்பட்டு நான்கு மாதங்கள் கழித்து, ஒசாமா பின்லேடனின் மகன் அப்துல்லா பின்லேடன், தனது தந்தையின் இறப்புச் சான்றிதழ் கேட்டு ரியாத்துக்கான அமெரிக்கத் தூதருருக்குக் கடிதம் எழுதியதை விக்கீலிக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.

அந்தக் கடிதத்திற்குப் பதிலளித்து அமெரிக்க தூதர் கிளென் கீஸர் கூறியிருப்பதாவது:

“உங்கள் தந்தை ஓசாமா பின்லேடனின் இறப்புச் சான்றிதழ் கேட்டு நீங்கள் அனுப்பியிருந்த கடிதம் எனக்குக் கிடைத்தது. அமெரிக்க வெளியுறவுத் துறையின் சட்ட  நிபுணர்கள் இது போன்ற ஆவணங்கள் விநியோகிக்கக் கூடாது என அறிவுறுத்தியுள்ளனர். ராணுவ நடவடிக்கையில் நடைபெறும் இதுபோன்ற  தனிநபர்க் கொலைகள் வழக்கமானவைதான்” என அக்கடித்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பின்லேடன் கொல்லப்பட்டதால் அவருக்கு எதிரான குற்றவியல் வழக்குகள் கைவிடப்பட்டன என்று அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்திய  நீதிமன்ற ஆவணங்களைப் பின்லேடன் மகனுக்கு அனுப்பியுள்ள அமெரிக்கத் தூதர், “இந்த ஆவணங்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் உதவியாக இருக்கும் என நம்புவதாகவும்” குறிப்பிட்டுள்ளார்.