Home கலை உலகம் ஜூராசிக் வேர்ல்ட்  உரிமையாளர் நான்தான்- இர்பான்கான் வேடிக்கை!

ஜூராசிக் வேர்ல்ட்  உரிமையாளர் நான்தான்- இர்பான்கான் வேடிக்கை!

565
0
SHARE
Ad

201506201123054275_Juracik-World-I-am-an-owner_SECVPF உலக சினிமா ரசிகர்கள் அனைவரையும் மிரட்சிக்குள்ளாக்குவது ‘ஜுராசிக் பார்க்’ திரைப்படங்கள்.

‘ஜுராசிக் பார்க்’ திரைப்படங்களில் நடிக்க, உலகளவில் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், இத்தகைய பிரம்மாண்ட திரைப்படத்தில் சாதாரணமாக நடித்துக் கொடுத்திருக்கிறார் பாலிவுட் நடிகர் இர்பான் கான்.

‘லைப் ஆப் பை’ படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அடியெடுத்து வைத்திருந்தாலும், சமீபத்தில் வெளியான ‘ஜூராசிக் வேர்ல்ட்’ திரைப்படம் இர்பானைக் கதாநாயகனுக்கு நிகரான கதாபாத்திரத்திற்கு உயர்த்தியுள்ளது.

#TamilSchoolmychoice

ஜூராசிக் வேர்ல்ட் திரைப்படத்தில் நடித்த அனுபவங்களை அவர் இரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அப்போது அவர், “’ஜூராசிக் வேர்ல்ட் உரிமையாளர் நான்தான். அதாவது, அந்தத் திரைப்படத்தின் கதைப்படி நான் தான் அதற்கு உரிமையாளர்” என்று வேடிக்கையாகக் குறிப்பிட்டுள்ளார்.

“20 வருடங்களுக்கு முன்னர் வெளியான ஜூராசிக் பார்க் படத்தை நண்பர்களுடன் மிரட்சியுடன் கண்டு களித்துள்ளேன். அப்படிப்பட்ட ஒரு படத்தில் நான் ஜூராசிக் வேர்ல்ட் உரிமையாளராகத் தோன்றுவதை உண்மையிலேயே பெருமையாக உணர்கிறேன்” என்று உருகுகிறார் அவர்.