Home கலை உலகம் உலக அளவில் ‘ஜூராசிக் வோர்ல்ட்’ திரைப்படம் வசூல் சாதனை!

உலக அளவில் ‘ஜூராசிக் வோர்ல்ட்’ திரைப்படம் வசூல் சாதனை!

691
0
SHARE
Ad

Jurassic-World - Poster 3கோலாலம்பூர், ஜூன் 16 –  ‘ஜூராசிக் வோர்ல்ட்’ திரைப்படம் வெளியான சில நாட்களில் பல்வேறு ஹாலிவுட் திரைப்படங்கள் உலகம் முழுவதும் நிகழ்த்திய ‘பாக்ஸ் ஆபிஸ்’ சாதனைகளைத் தகர்த்தெறிந்துள்ளது. இதுவரை உலகம் முழுவதும் 511 மில்லியன் அமெரிக்க டாலர்களை வாரிக் குவித்துள்ள இத்திரைப்படம், அமெரிக்காவில் மட்டும் 204.6 மில்லியன் டாலர்களைக் குவித்து பாக்ஸ் ஆபிஸ் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான ‘தி அவென்ஜர்ஸ்’ படம் உள்ளது.

அமெரிக்காவில் மட்டும் ஏறக்குறைய 50 சதவீதம் பேரால் பார்க்கப்பட்டுள்ள இத்திரைப்படம், இதுவரை உலகம் முழுவதும் வசூலை வாரிக் குவித்த ‘அவதார்’ மற்றும் ‘ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் 7’ ஆகிய படங்களின் சாதனையை மிஞ்சி முதலிடத்தைக் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

colin-trevorrow-chris-pratt-1ஏற்கனவே இந்தத் திரைப்படம் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான ‘ஹாரி பாட்டர் அன்ட் தி டெத்லி ஹால்லோஸ் பாகம்-2’ படத்தின் சாதனையை முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

வசூல் சாதனை பற்றி அப்படத்தின் இயக்குனர் கோலின் டிரெவரோவ் கூறுகையில், “இந்தச் சாதனை நிகழ்வதற்கு முக்கியக் காரணம் சினிமா ரசிகர்கள் தான். அவர்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே ஹாலிவுட் திரைப்படங்களின் மரபான அடுத்த பாகம் குறித்து டிரெவரோவிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு அவர், “ஜூராசிக் வோர்ல்ட் திரைப்படத்தின் தொடர்ச்சியைத் தயாரிக்கும் எண்ணம் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.