Home இந்தியா இந்தியா முழுவதும் ரூ.320 கோடி மதிப்புள்ள நெஸ்லே மேகி நூடுல்ஸ் அழிப்பு!

இந்தியா முழுவதும் ரூ.320 கோடி மதிப்புள்ள நெஸ்லே மேகி நூடுல்ஸ் அழிப்பு!

537
0
SHARE
Ad

maggi1புதுடெல்லி, ஜூன் 16 – ரசாயனக் கலப்பால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய மேகி நூடுல்ஸ், இந்தியா முழுவதும் தடை செய்யப்பட்டதையடுத்து ரூ.320 கோடி ரூபாய் மதிப்புள்ள மேகி நூடுல்ஸ் உணவுப் பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளதாக நெஸ்லே நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேகி நூடுல்சில் மோனோ சோடியம் குளூடாமேட் எனப்படும் ரசாயன உப்பு அதிகமாக இருப்பதால் ’மேகி நூடுல்ஸ் பாதுகாப்பற்றது’ என அண்மையில் மத்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அறிவித்தது. மேலும் இதன் விற்பனை மற்றும் உற்பத்திக்கும் தடை விதித்தது.

இதையடுத்துச் சந்தைகளில் வைக்கப்பட்டிருந்த மேகி நூடுல்ஸ் உணவுப் பொருட்களைத் திரும்பப்பெறும் நடவடிக்கையை ஏற்கனவே அந்நிறுவனம் துவங்கிவிட்ட நிலையில், தற்போது அந்த நூடுல்ஸ் பாக்கெட்டுகள் அனைத்தையும் அழிக்கும் நடவடிக்கையும் ஆரம்பித்துள்ளது.

#TamilSchoolmychoice

இதுகுறித்து நெஸ்லே நிறுவனம் மும்பை பங்குச்சந்தைக்குத் தெரிவித்த தகவலில், வணிகச் சந்தை மற்றும் வர்த்தகக் கூட்டாளிகளிடம் உள்ள மேகி நூடுல்சின் கையிருப்பின் மதிப்பு 210 கோடி என்றும்,

தொழிற்சாலைகள் மற்றும் விநியோக மையங்களில் உள்ள கையிருப்பு 110 கோடி என்றும் இவை அனைத்தையும் அழிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இது துல்லியமான மதிப்பீடு அல்ல என்றும் இன்னும் சில நாட்களில் அழிக்கப்பட்ட நூடுல்ஸ்களின் துல்லியமான மதிப்பீடு பற்றிய விவரங்கள் வெளியாகும் என்றும் நெஸ்லே நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.