Home உலகம் ராஜபக்சேவின் சகோதரர் பசீல் ராஜபக்சே பிணை மனுவில் விடுவிப்பு!

ராஜபக்சேவின் சகோதரர் பசீல் ராஜபக்சே பிணை மனுவில் விடுவிப்பு!

534
0
SHARE
Ad

Mahinda-and-Basilகொழும்பு, ஜூன் 16 – நிதி மோசடி வழக்கில் கைதுசெய்யப்பட்ட இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் சகோதரர் பசீல் ராஜபக்சேவைப் பிணை மனுவில் விடுவித்துக் கொழும்பு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் 8-ஆம் தேதி நடந்த அதிபர் தேர்தலில் மகிந்தா ராஜபக்சே படுதோல்வி அடைந்து, எதிர் அணி வேட்பாளர் சிறிசேனா அபார வெற்றி பெற்று அதிபர் ஆனார். அதைத் தொடர்ந்து முன்னாள் அதிபர் ராஜபக்சே ஆட்சிக்காலத்தில் பல்வேறு ஊழல்கள் அரங்கேறி இருப்பது வெளியே வந்தது.

குறிப்பாக ராஜபக்சே ஆட்சியில், அவரது நெருங்கிய ஆலோசகராகவும், பொருளாதாரத் துறை அமைச்சராகவும் இருந்த அவரது தம்பி பசில் ராஜபக்சே, சுமார் ரூ.3 கோடியே 29 லட்சம் நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

#TamilSchoolmychoice

அதன் பேரில் புதிய அரசு வழக்குப் பதிவு செய்தது. இதைதொடர்ந்து  நிதி மோசடி வழக்கில் அவர்  கொழும்பில் உள்ள நிதி குற்றத்தடுப்பு போலீசாரால் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி  கைது செய்யப்பட்டார்.

அவருடன், அவரது முன்னாள் செயலாளர் நிஹால் ஜெயதிலக, மற்றொரு முன்னாள் அதிகாரியான ரக் ரணவக்க ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.  இந்த நிலையில், பசில் ராஜபக்சேவை ஜாமீனில் விடுவித்து கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பசீல் ராஜபக்சே உள்ளிட்ட நான்குபேரையும் தலா ஒரு லட்சரூபாய் பிணைத்தொகையுடனும் ரூ.10 லட்சத்துக்கான நான்கு நபர் உத்தரவாதத்துடனும் கொழும்பு நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்தது.

மேலும், தனது பயணக் கடவுச்சீட்டை இலங்கை கடுவெலா நீதிமன்றத்தில் பசீல் ராஜபக்சே ஒப்படைக்க வேண்டும் என்றும் கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.