Home உலகம் “அமெரிக்காவை மீட்க அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறேன்” – ஜெப் புஷ் அறிவிப்பு!

“அமெரிக்காவை மீட்க அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறேன்” – ஜெப் புஷ் அறிவிப்பு!

602
0
SHARE
Ad

bush1நியூ யார்க், ஜூன் 16 – “அமெரிக்கா, தற்போதைய அரசின் செயல்பாடுகளால் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த சூழலில் அமெரிக்காவை மீட்க நான் அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறேன்” என ஜெப் புஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அமெரிக்க அரசியலில் அனைவராலும் அறியப்படும் ஜெப் புஷ், அந்நாட்டின் முன்னேற்றத்திற்குப் பெரும் பணியாற்றிய பாரம்பரியக் குடும்பத்தில் இருந்து வந்தவர். இவரது தந்தை ஜார்ஜ் புஷ், 1989-ஆம் ஆண்டு முதல் 1993 வரை அமெரிக்க அதிபராகப் பதவி வகித்தார். இவரது சகோதரர், ஜார்ஜ் டபிள்யு புஷ் 2001-ஆம் ஆண்டு முதல் 2009 வரை அதிபராக இருந்துள்ளார். அந்த வரிசையில் ஜெப் புஷ்ஷும் இணைவார் என்று பல காலமாகக் கூறப்பட்டு வந்தது. இருப்பினும் இது பற்றிய எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பினையும் அவர் வெளியிடாமல் இருந்தார்.

இந்நிலையில், தனது ஐரோப்பிய சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய ஜெப் புஷ், நேற்று ‘மியாமி டேட்’ கல்லூரியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டார். அந்தக் கூட்டத்தில் அவர் கூறியதாவது:-

#TamilSchoolmychoice

“அமெரிக்கா, தற்போதைய அரசின் செயல்பாடுகளால் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்தச் சூழலில் அமெரிக்காவிற்கு நான் என்ன செய்யப்போகிறேன் என்ற கேள்வி எழுந்துள்ளது.அதற்கான பதிலை நான் இப்போது கூறுகிறேன். ஆம், நான் அமெரிக்காவிற்கான அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளேன்” என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே ஃப்ளோரிட மாகாணத்தின் ஆளுநர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துள்ள ஜெப் புஷ், அவர் சார்ந்திருக்கும் குடியரசுக் கட்சியில் செல்வாக்கு மிகுந்த மனிதராகவும், நேர்மையாளராகவும் பார்க்கப்படுகிறார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஏற்கனவே ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஜெப் புஷ்ஷும் போட்டியிடுவதால் அமெரிக்க அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.