Home இந்தியா லதா ரஜினி மீது போலி ஆவணங்களைச் சமர்ப்பித்ததாகப் பெங்களூரில் வழக்குப் பதிவு!

லதா ரஜினி மீது போலி ஆவணங்களைச் சமர்ப்பித்ததாகப் பெங்களூரில் வழக்குப் பதிவு!

548
0
SHARE
Ad

-Latha-Rajinikanthபெங்களூரு, ஜூன் 16 – ‘கோச்சடையான்’ பட நிதி மோசடி விவகாரத்தில், ஊடகங்கள் தன்னைப் பற்றிச் செய்திகளை வெளியிட லதா ரஜினிகாந்த் வாங்கிய தடை உத்தரவு போலியானது எனத் தற்போது தெரிய வந்துள்ளது. அதன் காரணமாகப் பெங்களூரு காவல் துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரஜினிகாந்தை வைத்து அவரின் மகள் சௌந்தர்யா உருவாக்கிய கோச்சடையான் படத்துக்கு நிதிவழங்கியது தொடர்பாக , ஆட் பீரோ என்ற நிறுவனம் ஏற்கனவே லதா மீது மோசடி குற்றச்சாட்டைச் சுமத்தியது. இந்தப் பிரச்சனை பற்றிச் செய்தி வெளியிட 76 பத்திரிக்கைகள் மற்றும் செய்தி வெளியீட்டு நிறுவனங்கள் மீது தடை கோரி பெங்களூரு நீதிமன்றம் மூலம் தடை பெற்றிருந்தார் லதா ரஜினிகாந்த்.

இதற்காக அவர், 76 ஊடகங்களுக்கும் இந்திய வெளியீட்டாளர்கள் மற்றும் ஒலிபரப்பு நலச் சங்கம் என்ற அமைப்பு தடை விதித்துள்ளதாகக் கூறி, அந்த அமைப்பின்  கடிதம் ஒன்றை பெங்களூரு நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு நீதிமன்றம் தடை விதித்தது. இருப்பினும் இந்தத் தடையைச் சென்னை உயர் நீதிமன்றம் பின்னர் ரத்து செய்தது.

#TamilSchoolmychoice

இந்நிலையில் லதா ரஜினிகாந்த் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த இந்திய வெளியீட்டாளர்கள் மற்றும் ஒலிபரப்பு நலச் சங்கத்தின் கடிதம் போலியானது எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாகப் பெங்களூரு பெருநகர தலைமைக் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் கடந்த ஜூன் 9-ம் தேதி பிறப்பித்த உத்தரவின்பேரில், தற்போது பெங்களூரு காவல் துறையினர், போலி ஆவணத்தைச் சமர்பித்ததாகக் கூறி லதா ரஜினிகாந்திற்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து அவர்கள் விரைவில் சென்னைக்கு வந்து லதா ரஜினிகாந்திடம் விசாரணை மேற்கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. விசாரணையில் லதா ரஜினிகாந்த் போலி ஆவணங்களைச் சமர்பித்தது உண்மை எனில் அவர் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.