Home இந்தியா ‘வாடகை அல்ல சுரண்டல்’ – லதா விளக்கம்!

‘வாடகை அல்ல சுரண்டல்’ – லதா விளக்கம்!

1005
0
SHARE
Ad

Latha Rajinikanthசென்னை – கிண்டியில் லதா ரஜினிகாந்திற்குச் சொந்தமான ‘ஆஸ்ரம் மெட்ரிகுலேசன் பள்ளி’ செயல்பட்டு வந்த கட்டிடம், நேற்று புதன்கிழமை அதன் உரிமையாளரால் மூடப்பட்டது.

கடந்த 5 ஆண்டுகளாக வாடகை கொடுக்காத காரணத்தால் அக்கட்டிடத்தை அதன் உரிமையாளர் மூடிவிட்டதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், லதா ரஜினிகாந்த் தரப்பில் வெளியிடப்பட்டிருக்கும் விளக்க அறிக்கையில், “நாங்கள் கிண்டியில் கடந்த பத்து ஆண்டுகளாக பள்ளி நடத்தி வருகிறோம். சமீபகாலமாக நிலத்தின்  உரிமையாளரின் குடும்பத் தகராறு காரணமாக, நாங்கள் அவர்களிடமிருந்து அநேக தொந்தரவுகளை சந்தித்து வருகிறோம்.”

#TamilSchoolmychoice

“இது வாடகை பற்றியது மட்டும் அல்ல. இது ஒரு சுரண்டல். அவர்கள் காரணமில்லாமலும், முறையற்ற நிலையிலும் வாடகைத் தொகையை நாங்கள் பேசிய தொகையைக் காட்டிலும் அதிகரித்தனர்.”

“நாங்கள் ஏற்கனவே இது குறித்து ஆலோசித்தது மட்டுமல்லாமல் அந்த இடத்தைக் காலி செய்வது குறித்து முடிவெடுத்துள்ளோம். இந்த பிரச்னையை முடிப்பது தொடர்பான பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டுள்ளோம்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.