Home நாடு வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குக் கட்டாய மருத்துவப் பரிசோதனை: சாஹிட்

வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குக் கட்டாய மருத்துவப் பரிசோதனை: சாஹிட்

763
0
SHARE
Ad

ahmad-zahid-hamidiகோலாலம்பூர் – மலேசியாவில் பணியாற்றி வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் அனைவரும், குறிபிடப்படும் காலங்களில் கட்டாய மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடி தெரிவித்திருக்கிறார்.

இத்திட்டம் 2018-ம் ஆண்டு ஜனவரி முதல் அமலுக்கு வருவதாக சாஹிட் குறிப்பிட்டிருக்கிறார்.

நோய் தொற்றுகள் மலேசியாவில் பரவாமல் தடுக்க இது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் சாஹிட் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை, இந்த கூடுதல் மருத்துவப் பரிசோதனைகளை அனைத்துத் தொழிலாளர்கள் எடுக்க வேண்டும் என்று சாஹிட் இன்று வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.