Home இந்தியா வாடகை பாக்கி: லதா ரஜினிகாந்தின் பள்ளி மூடப்பட்டது!

வாடகை பாக்கி: லதா ரஜினிகாந்தின் பள்ளி மூடப்பட்டது!

1053
0
SHARE
Ad

soundarya_rajnikanth_marriage_latha_rajiniசென்னை – சென்னை கிண்டியில் நடிகர் ரஜினிகாந்தின் மனைவியான லதா ரஜினிகாந்த் நடத்தி வந்த ‘தி ஆஸ்ரம்’ என்ற பள்ளி இன்று புதன்கிழமை மூடப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.

பள்ளிக் கட்டிடத்திற்கு கடந்த 5 ஆண்டுகளாக வாடகை கொடுக்காமல், சுமார் 10 கோடி ரூபாய் வரையில் வாடகை பாக்கி வைத்திருந்த காரணத்தால், அக்கட்டிட உரிமையாளர் பள்ளியை இழுத்துப் பூட்டிவிட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.

இதனிடையே, ‘தி ஆஸ்ரம்’ பள்ளியில் படித்து வந்த மாணவர்கள் அனைவரும், வேளச்சேரியில் லதா ரஜினிகாந்திற்குச் சொந்தமான மற்றொரு பள்ளிக்கு மாற்றப்பட்டிருக்கின்றனர்.