புதுடெல்லி – மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவால், தமிழகத்தில் ‘அம்மா உணவகம்’ தொடங்கப்பட்டு, ஏழை எளிய மக்களுக்குக் குறைந்த விலையில் உணவுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இதே போன்றதொரு திட்டம் கர்நாடக மாநிலம் பெங்களூரில் இன்று புதன்கிழமை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியால் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, ‘பெங்களூரில் பசியால் யாரும் வாடக் கூடாது’ என்ற நோக்கத்தில் தனது பாட்டியின் பெயரில், ‘இந்திரா உணவகம்’ தொடங்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
இத்திட்டத்தைக் கர்நாடகாவையும் தாண்டி காங்கிரஸ் ஆளும் மற்ற மாநிலங்களிலும் கொண்டு வரத் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் ராகுல் காந்தி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் ராகுல் காந்தியுடன் கர்நாடக முதலமைச்சர் சித்தாராமையாவும் கலந்து கொண்டு, ‘கர்நாடக மாநிலத்தில் இது ஒரு வரலாற்றுப்பூர்வ நிகழ்வு’ என்று குறிப்பிட்டார்.
படம்: நன்றி இந்தியன் எக்ஸ்பிரஸ்