Home கலை உலகம் பிக்பாஸ் வீட்டிற்குள் புதிய பிரபலம்!

பிக்பாஸ் வீட்டிற்குள் புதிய பிரபலம்!

856
0
SHARE
Ad

bigbossசென்னை – பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் 51-வது நாளை எட்டியிருக்கும் நிலையில், இன்று புதிய பிரபலம் ஒருவர் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்.

விஜய் தொலைக்காட்சி இன்று புதன்கிழமை வெளியிட்டிருக்கும் முன்னோட்டக் காட்சியில் மைக்கேல் ஜாக்சன் போல் உடையணிந்த பெண், ஆட்டம் பாட்டத்துடன் கயிறு கட்டி உள்ளே இறக்கப்படுகிறார்.

அவர் யார் என்று உறுதியாகத் தெரியாத நிலையில், அவர் நடிகை சுஜா என்று கூறப்படுகின்றது. நடிகை சுஜா வருணி, தமிழில், ‘சேட்டை’ ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘பென்சில்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.