Home நாடு சீ விளையாட்டுப் போட்டி 2017: மலேசியாவுக்கு முதல் தங்கம்!

சீ விளையாட்டுப் போட்டி 2017: மலேசியாவுக்கு முதல் தங்கம்!

933
0
SHARE
Ad

chinlone-pic-starகோலாலம்பூர் – சீ விளையாட்டுப் போட்டிகள் 2017-ல், இன்று புதன்கிழமை மலேசியா தனது முதல் தங்கத்தை வென்றது.

தித்திவாங்சா அரங்கில் நடைபெற்ற, ஆண்களுக்கான சின்லோன் லிங்கிங் என்ற மியன்மார் பாரம்பரிய விளையாட்டுப் போட்டியில், மலேசிய அணி, 391 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கம் வென்றது.

பிலிப்பைன்ஸ் அணி 271 புள்ளிகள் பெற்று வெள்ளியும், 157 பெற்ற புருனே அணி வெண்கலமும் பெற்றன.

#TamilSchoolmychoice

கடந்த 2013-ம் ஆண்டு மியன்மாரில் நடைபெற்ற சீ விளையாட்டுப் போட்டியில், இந்த பாரம்பரிய விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் அப்போது மலேசியா எந்தப் பதக்கமும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.