Home நாடு மலேசிய இந்திய இளைஞர் மன்ற மாநாடு இயங்கலை வழி நடைபெறுகிறது

மலேசிய இந்திய இளைஞர் மன்ற மாநாடு இயங்கலை வழி நடைபெறுகிறது

713
0
SHARE
Ad

கோலாலம்பூர் : மலேசிய இந்தியர் இளைஞர் மன்றத்தின் சிறப்பு மாநாடு இன்று சனிக்கிழமை ஜூலை 10 மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை ஜூலை 11 ஆகிய இரு தினங்களில் இயங்கலை வழி காலை முதல் மாலை வரை நடத்தப்படுகிறது.

இம்மாநாட்டினை இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ரிசால் மரிக்கான் அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கிறார். இந்த மாநாட்டின் அதிகாரப்பூர்வ நிறைவு விழாவை இளைஞர், விளையாட்டு துறை துணை அமைச்சர் செனட்டர் வான் பைசால் வான் அமாட் நிறைவு செய்து வைக்கிறார்.

மலேசிய இந்திய இளைஞர் மன்றத்தின் கிளை அமைப்பின் 200 உயர்மட்ட தலைவர்களை ஒன்றிணைக்கும் ஒரு தளமாக இந்த மாநாடு அமையவிருக்கின்றது. 11 மாநிலங்களில் இருக்கின்ற மலேசிய இந்திய இளைஞர் மன்றத்தின் கிளைத் தலைவர்கள், துணை தலைவர்கள், மற்றும் செயலாளர்கள் ஆகியோர் இந்த மாநாட்டில் பேராளர்கள் ஆக கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

இந்த மாநாட்டின் சிறப்பு அம்சமாக பல பயனுள்ள விளக்கங்களும் கருத்தரங்குகளும் நடைபெற உள்ளன. அரசாங்கத்திலிருந்தும் இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் இருந்தும் இளைஞர்களுக்கு வழங்குகின்ற சலுகைகள் வாய்ப்புகள் ஆகியவற்றின் விளக்கங்களும் இந்த மாநாட்டின் வாயிலாக அனைத்து கிளை உயர்மட்டத் தலைவர்களுக்கு கொண்டு சேர்க்கப்படும் நோக்கத்தில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதோடு மட்டுமல்லாமல் அரசாங்க நிறுவனங்களாகிய பெர்கேசோ, தெக்குன், இன்ஸ்கென் (PERKESO, TEKUN, INSKEN) ஆகிய நிறுவனங்களும் இளைஞர்களுக்கு ஏற்படுத்தித் தரவிருக்கின்ற வாய்ப்புகளையும் சலுகைகளையும் இந்த மாநாட்டின் வாயிலாக விளக்க உள்ளனர். கோவிட் பெருந்தொற்று மற்றும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையினால் வேலை மற்றும் வியாபார வாய்ப்புகளை இழந்து தவிக்கும் இந்திய இளைஞர்களுக்கு இந்த மாநாட்டின் வாயிலாக வழங்கப்படும் தகவல்கள் நிச்சயமாக பயனாக அமையும்.

தேசிய அளவிலும், மாநில அளவிலும், கிளை அளவிலும் சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் மலேசிய இந்திய இளைஞர் மன்றத்தின் உயர்மட்டத் தலைவர்களை ஒன்றிணைத்து அவர்களுக்கு இடையிலான ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் வலுவடையச் செய்வதும் இந்த மாநாட்டின் தலையாய நோக்கமாகும்.