Home One Line P1 வேலையற்ற இளைஞர்களுக்கு உதவி தேவைப்படுகிறது!- சைட் சாதிக்

வேலையற்ற இளைஞர்களுக்கு உதவி தேவைப்படுகிறது!- சைட் சாதிக்

579
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முன்னாள் இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சரான சைட் சாதிக், குறைந்த விலை விமான நிறுவனத்தின் விமானி ஒருவர் தனது வேலையை இழந்தது காரணமாகத் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து கவலை தெரிவித்துள்ளார்.

வேலையற்ற இளைஞர்களுக்கு உதவி தேவைப்படுவதாக அவர் கூறினார்.

“நாம் வேலைகள் உள்ளவர்கள் மீது கவனம் செலுத்துகிறோம். வேலைகள் இல்லாதவர்கள் மீது கவனம் செலுத்தாவிடில், இது மீண்டும் நிகழக்கூடும்” என்று அவர் இன்று மக்களவையில் கூறினார்.

#TamilSchoolmychoice

இளைஞர், விளையாட்டுத்துறை, நிதி மற்றும் மனிதவளத் துறை அமைச்சகங்கள் இணைந்து செயல்படுவதன் மூலம், அவர்களுக்காக ஒரு சிறப்பு ஒதுக்கீட்டை உருவாக்க முடியும் என்று அவர் கூறினார்.

இதற்கு பதிலளித்த இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சர் ரீசால் மெரிக்கன், அமைச்சகத்தில் பல்வேறு அரசு நிறுவனங்கள், தொழில்முனைவோர் மற்றும் வேளாண் சார்ந்த விவசாய திட்டங்களுடன் பயிற்சி திட்டங்களும் உள்ளதாகத் தெரிவித்தார்.

இதற்கிடையில், 35 வயதான சஞ்சீவ் டேவின் எனும் விமானி தனது அடுக்குமாடி குடியிருப்பின் 12-வது மாடியில் இருந்து கீழே விழுந்ததாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்ததாக செர்டாங் காவல் துறைத் தலைவர் இஸ்மாடி போர்ஹான் தெரிவித்திருந்தார்.

“நாங்கள் குற்றச் செயல்களை நிராகரிக்கிறோம். சாட்சிகள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களிடமிருந்து பதிவு செய்யப்பட்ட அறிக்கைகளின்படி, பாதிக்கப்பட்டவர் இரண்டு மாதங்களுக்கு முன்பு வேலை இழந்ததால் துன்பகரமான நிலையில் இருந்தார். ” என்று அவர் கூறியிருந்தார்.