இதைத் தொடர்ந்து நாட்டின் மொத்த கொவிட்19 பாதிப்பு எண்ணிக்கை 9,023-ஆக உயர்ந்துள்ளது.
புதிதாக அடையாளம் காணப்பட்ட சம்பவங்களில் 15 பேர் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்கள் ஆவர். மேலும், அறுவர் உள்நாட்டிலேயே தொற்றுக் கண்டவர்கள். அவர்களில், மூவர் கெடாவில் தொற்றுக் கண்டுள்ளனர். ஒருவர் சபா மற்றும் ஜோகூரில் தொற்றுக் கண்டுள்ளனர்.
இன்று 18 பேர் குணமடைந்து வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 8,702 -ஆக உயர்ந்துள்ளது.
நாட்டில் மொத்தம் 196 பேர் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் இருவர் அவசரப் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
Comments