Home One Line P1 கலாச்சார, இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை முன்னாள் அமைச்சர் காலமானார்

கலாச்சார, இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை முன்னாள் அமைச்சர் காலமானார்

625
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கலாச்சார, இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை முன்னாள் அமைச்சர் மொக்தார் ஹாஷிம் இன்று காலமானார். அவருக்கு 78 வயது.

இந்த விஷயத்தை அவரது மருமகன் அகமட் ஹாபீஸ் அப்துல் ரபார் முகநூல் பதிவு மூலம் உறுதிப்படுத்தினார்.

அவர் அதிகாலை 3.10 மணியளவில் இறந்ததாக ஹாபீஸ் பதிவிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

“குடும்பத்தின் சார்பாக, இன்று அதிகாலை 3.10 மணிக்கு எங்கள் அன்புக்குரிய தந்தை (மொக்தார்) காலமானதை தெரிவிக்க விரும்புகிறேன்.

“இறுதி பிரார்த்தனை மற்றும் இறுதி சடங்குகள் பற்றிய விஷயங்கள் தெரிவிக்கப்படும்,” என்று அவர் பதிவிட்டுள்ளார்.