பெர்லின்: ஜெர்மனியின் மெக்லென்பர்க் நகரத்தில் ரோஸ்டோக் என்ற இடத்திற்கு அருகே இருக்கும் கோழிப் பண்ணையில் எச்5என்8 வகை பறவை காய்ச்சல் பரவுவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதைக் கட்டுப்படுத்துவதற்காக சுமார் 70,000 கோழிகளை கொல்ல முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மெக்லென்பர்க் நகரத்தில் மற்றொரு பண்ணையில் பறவைக் காய்ச்சல் பரவுவது உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்து, சுமார் 16,100 வான்கோழிகள் ஏற்கெனவே கொல்லப்பட்டுள்ளன.
உலகம் கடந்த 11 மாதங்களாக கொவிட்-19 தொற்றினால் முடங்கி இருக்கும் இந்நிலையில், இது போன்ற தொற்றுகள் கூடுதல் பீதியை ஏற்படுத்தி உள்ளது.