Home Uncategorized எம்எச்370 விமானம் விழுந்த இடம் கண்டறியப்பட்டது!

எம்எச்370 விமானம் விழுந்த இடம் கண்டறியப்பட்டது!

1126
0
SHARE
Ad

கோலாலம்பூர் – எம்எச்370 விமானம் கடைசியாக விழுந்து நொறுங்கிய இடத்தைக் கண்டறிந்துவிட்டதாக ஆஸ்திரேலியப் போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு அறிவித்திருக்கிறது.

தென்னிந்திய கடலில், மனிதனால் உருவாக்கப்பட்ட பாகங்கள் மிதந்ததை செயற்கைக் கோள் புகைப்படம் (படம்) உறுதிப்படுத்தியிருக்கிறது.

MH370இது குறித்து நேற்று புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், “விமானம் மாயமான ஒரு வாரத்திற்குப் பிறகு அப்பகுதியில் மனிதனால் உருவாக்கப்பட்ட பாகங்கள் மிதப்பதை செயற்கைக்கோள் படம் பிடித்திருக்கிறது. எனினும், அந்தப் பகுதியில் இதுவரை எந்த ஒரு தேடுதல் பணியும் நடத்தப்படவில்லை. காரணம் அது அதிகாரப்பூர்வத் தேடும் பகுதியில் இருந்து 46,000 சதுர மைல்கள் தொலைவில் இருக்கிறது” எனத் தேடல் பணிக்குத் தலைமை வகிக்கும் ஆஸ்திரேலியப் போக்குவது பாதுகாப்பு அமைப்பு தெரிவித்திருக்கிறது.

#TamilSchoolmychoice