Home உலகம் ராஜபக்சேவின் மனைவி சிராந்தியை விசாரணைக்கு வருமாறு போலீசார் சம்மன்!

ராஜபக்சேவின் மனைவி சிராந்தியை விசாரணைக்கு வருமாறு போலீசார் சம்மன்!

436
0
SHARE
Ad

rajapaksa-with-his-wife--60கொழும்பு, மே 28 – இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மனைவி சிராந்தி ராஜபக்சேவை விசாரணைக்கு வருமாறு அந்நாட்டு நிதி மோசடி தடுப்பு பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

வரும் ஜூன் 1-ஆம் தேதியன்று நிதிமோசடி தடுப்பு பிரிவில் ஆஜராகவேண்டும் என்று அந்த சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிலிய சவிய என்ற அமைப்பின் மூலம் நிதி மோசடி செய்யப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டின் பேரிலேயே சிராந்தியிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

இந்த அமைப்பின் தலைவராக சிராந்தி ராஜபக்சே செயல்பட்டு வந்துள்ளார். சிராந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதை ராஜபக்சேவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நமல் ராஜபக்சே தனது சமூக வலைதளத்தில் உறுதி செய்துள்ளார்.

#TamilSchoolmychoice

இதன் மூலம் சிறிசேனா அரசு தங்கள் குடும்பத்தை சித்ரவதை செய்ய முயல்வதாக நமல் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், ராஜாபக்சே இது குறித்து “என் குடும்ப உறுப்பினர்களை விசாரணை என கூறி சித்ரவதை செய்வதுமன வேதனையளிக்கிறது” என தெரிவித்துள்ளார்.