Home இந்தியா உலக ‘செஸ்’ விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்தின் தாயார் காலமானார்!

உலக ‘செஸ்’ விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்தின் தாயார் காலமானார்!

693
0
SHARE
Ad

Vishy Anandசென்னை, மே 28 – உலக ‘செஸ்’ சாம்பியன் பட்டத்தை 5 முறை வென்றவரும், இந்தியாவில் ‘செஸ்’ ஆட்டத்தின் மீது இளைஞர்களுக்கு தாக்கம் ஏற்படுத்தியவருமான விஸ்வநாதன் ஆனந்தின் தாயார் சுசீலா, சென்னை பெசன்ட்நகரில் உள்ள தனது வீட்டில் நேற்று காலை காலமானார்.

விஸ்வநாதன் ஆனந்தின் தாயாருக்கு வயது 79. அவரி இறுதிச் சடங்கு பெசன்ட்நகர் மின்சார தகன மையத்தில் நேற்று மாலை (வியாழக்கிழமை) நடந்தது.

ஆனந்துக்கு செஸ் ஆட்டத்தின் அடிப்படை காய் நகர்த்தல்களை கற்றுக்கொடுத்ததுடன், இளம் வயதில் அவரை எல்லா போட்டிகளுக்கு அழைத்து செல்வதுடன் ஊக்கம் அளித்ததிலும் தாயார் சுசீலாவுக்கு முக்கிய பங்கு உண்டு.

#TamilSchoolmychoice

சுசீலாவின் கணவர் விஸ்வநாதன் தெற்கு ரெயில்வேயின் பொதுமேலாளராக இருந்து ஓய்வு பெற்றவர். இந்த தம்பதிக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். இதில் கடைசி மகன் தான் ஆனந்த் ஆவார்.

ஆனந்தின் தாயார் மறைவுக்கு அகில இந்திய செஸ் சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு செஸ் சங்க நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.