Home இந்தியா செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் தாயார் மறைவிற்கு – ஜெயலலிதா இரங்கல்!

செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் தாயார் மறைவிற்கு – ஜெயலலிதா இரங்கல்!

647
0
SHARE
Ad

jayalalitha-asks-pm-for-immediசென்னை, மே 29 – செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் தாயார் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செஸ் வீரர் ஆனந்துக்கு முதலமைச்சர் ஜெயலலிதா அனுப்பியுள்ள இரங்கல் செய்தியில்:

“கடந்த 26 ஆம் தேதி உங்கள் அன்புக்குரிய தாய் சுசீலா காலமான செய்தி அறிந்து மிகுந்த துயறுற்றேன். தாயை இழந்து தவிக்கும் இந்த சூழலில் எந்த வார்த்தைகளும் உங்களுக்கு ஆறுதலாக இருந்து விடமுடியாது”.

Vishy Anand“உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் என்னுடை ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதன் மூலம், உங்கள் துக்கத்தை பகிர்ந்து கொள்கிறேன்”.

#TamilSchoolmychoice

“காலமான உங்கள் தாயாரின் ஆன்மா இறைவனடியில் சாந்தியடைய நான் மனப்பூர்வமாக பிரார்த்தனை செய்கிறேன்” என ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.