Home நாடு குடியேறிகள் கொலை: காவல்துறை அதிகாரிகள் அறிந்திருக்கவில்லை – ஷாஹிடன் காசிம்

குடியேறிகள் கொலை: காவல்துறை அதிகாரிகள் அறிந்திருக்கவில்லை – ஷாஹிடன் காசிம்

516
0
SHARE
Ad

amaran-shahidan-kassim-ngo-persatuan-parti-parlimenஅலோர் ஸ்டார், மே 29 – பெர்லிசிலில் குடியேறிகள் கொல்லப்பட்ட விவகாரத்தில் தொடர்புள்ளதாகச் சந்தேகிக்கப்படும் காவல்துறை அதிகாரிகளுக்கு உண்மையில் அவ்வாறு படுகொலைகள் நடப்பது தெரிந்திருக்கவில்லை என்று பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஷாஹிடன் காசிம் தெரிவித்துள்ளார்.

சந்தேக வலையில் உள்ள காவல்துறை அதிகாரிகள் குறுக்கு வழியில் விரைவாக பணம் கிடைக்கும் என்ற ஆசையால் தூண்டப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

“மனிதக் கடத்தல் கும்பல் குறித்தும், தடுப்பு முகாம்களில் நடந்தவை குறித்தும் அறிந்தவர்கள் தாமாக முன்வந்து விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். சந்தேகத்திற்குரிய காவல்துறை அதிகாரிகளுக்கு பணம் கிடைத்திருக்கலாமே தவிர தடுப்பு முகாம்களில் சித்ரவதைகள் அரங்கேறியதையும், படுகொலைகள் நிகழ்ந்தததையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை.”

#TamilSchoolmychoice

“இந்தக் கடத்தல் கும்பலை இயங்க அனுமதித்ததில் இந்த அதிகாரிகளுக்கு சிறிய பங்களிப்பே இருந்துள்ளது. எனினும் தற்போது அவர்களுக்கு துர்கனவுகள் வருவது உறுதி,” என்று அலோர் ஸ்டாரில் செய்தியாளர்களிடம் பேசிய ஷாஹிடன் காசிம் தெரிவித்தார்.

முன்னதாக பெர்லிஸ் மாநிலத்தில் உள்ள வாங் கெலியான் பகுதியில் மனிதக் கடத்தல் கும்பல்களால் நடத்தப்பட்ட 28 தடுப்பு முகாம்களையும், 139 சவக்குழிகளையும் போலீசார் கண்டுபிடித்தனர்.

இங்கு கண்டெடுக்கப்பட்ட சடலங்கள், தாய்லாந்து வாயிலாக மலேசியாவுக்குள் நுழைய முயன்ற வங்காள தேசம் மற்றும் மியான்மர் குடியேறிகளின் சடலங்களாக இருக்க வேண்டும் என நம்பப்படுகிறது.