வறுமையை ஒழிக்க மோடி எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து பாராட்டுக்களை தெரிவித்துள்ள ஜிம் யோங், டுவிட்டர் வாயிலாக மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில், “இந்தியாவில் வறுமையை ஒழிப்பதற்கான உங்களின் முயற்சிகளுக்கு எனது வாழ்த்துக்கள். உங்களைப் போன்ற தலைவர்கள் தான் இந்த உலகிற்கு தேவை” என்று தெரிவித்துள்ளார்.
அதற்கு நன்றி தெரிவித்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, “மிக்க நன்றி ஜிம் யோங் கிம். உலக அளவில் வறுமையை ஒழிக்க நாம் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
Comments