Home வணிகம்/தொழில் நுட்பம் வரும் ஆண்டுகளில், வளர்ச்சியடைந்த நாடாக உருமாறும் மலேசியா!

வரும் ஆண்டுகளில், வளர்ச்சியடைந்த நாடாக உருமாறும் மலேசியா!

1259
0
SHARE
Ad

கோலாலம்பூர்: வருகிற ஆண்டுகளில் மலேசியா உயர் வருவாய் மற்றும் வளர்ச்சியடைந்த நாடுகளின் நிலையை அடைவதற்கான பாதையில் பயணித்து வருவதாக உலக வங்கியின், கிழக்காசியா மற்றும் பசிபிக் பகுதிகளுக்கான துணைத் தலைவர் விக்டோரியா குவாக்வா அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்தார்.

இந்த செயல்முறையின் ஒரு பகுதியாக, மலேசிய அரசாங்கத்தின் முயற்சிகளை வரவேற்கிறோம். வணிக நிறுவனங்களை வலுப்படுத்தவும், மனித மூலதனத்தை அபிவிருத்தி செய்யவும் சமூகத்தில் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்கவும் முன்னெடுக்கப்படும் முயற்சிகளை நாங்கள் வரவேற்கிறோம். இந்த முக்கியமான மாற்றம் நிகழக் கூடியக் காலத்தில் மலேசியாவை ஆதரிக்க உலக வங்கி தயாராக உள்ளது,” என்று அவர் கூறினார்.

பிரதமர் துன் மகாதீர் முகமட், நிதி அமைச்சர் லிம் குவான் எங் மற்றும் பேங்க் நெகாரா ஆளுநர் டத்தோ நோர் ஷாம்சியா முகமட் யுனோஸ் உடனான சந்திப்பிற்குப் பின்பு, துணை மாமன்னர் சுல்தான் நஸ்ரின் ஷாவுடன், மலேசியாவிலும், இதர பகுதிகளிலும் வளர்ச்சிப் போக்குகள் எப்படி செயல்படுகின்றன எனும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டார்.