Home இந்தியா வெளிநாட்டுப் பயணங்கள் குறித்த விமர்சனம் – மோடி பதிலடி!

வெளிநாட்டுப் பயணங்கள் குறித்த விமர்சனம் – மோடி பதிலடி!

534
0
SHARE
Ad

narendra-modiநியூ டெல்லி, மே 29 – வெளிநாட்டுப் பயணங்கள் அதிக அளவில் மேற்கொள்வது குறித்த பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வெளிப்படையாக பதில் அளித்துள்ளார்.

நரேந்திர மோடி பதவி ஏற்ற நாள் முதல் அதிக அளவில் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டு வருகிறார். அவர் மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்தால் இந்திய மாநிலங்களை சுற்றிப் பார்த்து இங்கு மக்களின் வாழ்க்கைத் தரம் எப்படி உள்ளது என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சிகள் அவர் மீது பலமான விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் மோடியுடனான பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது, இது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் கூறியதாவது:-

#TamilSchoolmychoice

“எதிர்க்கட்சிகளுக்கு எனது ஆட்சியில் குறை கூறுவதற்கு வேறு ஒன்றும் புலப்படவில்லை. அதனால் தான் எனது வெளிநாட்டு பயணங்கள் குறித்து அதிக அளவில் விமர்சனங்களை செய்து வருகின்றனர். நாம் எப்பொழுதும் பெரிய நாடு என்ற நினைப்பில் அண்டை நாடுகளை புறக்கணித்து விடக் கூடாது.”

“உலக அரங்கில் இந்தியா தனித்து விடப்பட்டால் அந்த இழப்பை நம்மால் தாங்கிக் கொள்ள முடியாது. எனது பயணங்கள் மூலம் அண்டை நாடுகளுடனான நமது நட்பு பலம் பெறும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், இந்திய மாநிலங்களுக்கு மோடி ஏன் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எழுப்பி கேள்விக்கு மோடி இதுவரை எவ்வித பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.