கொழும்பு, மே 29 – ஐக்கிய நாடுகள் செயற்குழு வரும் ஆகஸ்ட் மாதம் 3-ஆம் தேதி இலங்கைக்கு வரவுள்ளதாக, இலங்கை வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மகிஷினி கொலோன் நேற்று முன்தினம் (புதன்கிழமை) கூறினார்.
யுத்த கால ஆட்கடத்தல் மற்றும் காணாமல் போனோர் தொடர்பில் உதவி வழங்கும்படி முன்னைய அரசாங்கம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, பலவந்தமாக கடத்தப்பட்ட அல்லது காணாமல் போக செய்யப்பட்டமைக்காக விசாரணைகளை மேற்கொள்வதற்காகவே இந்த குழு இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மனித உரிமைகள் பேரவையுடன் இணைந்த இந்த குழு, காணாமல் போனதாக கூறப்படுவோர் எங்கு உள்ளனர் என கண்டறிவதோடு, காணாமல் போனவர்களின் குடுப்பத்தினருக்கும் அரசாங்கத்துக்கும் இடையே ஓர் இணைப்பாகவும் செயற்படவுள்ளதாக அவர் கூறினார்.
5 அங்கத்தவர்களை கொண்ட ஐக்கிய நாடுகள் செயற்குழு வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை இலங்கையில் தங்கியிருந்து, விசாரணைகளை மேற்கொள் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.