Home நாடு மலேசியாவின் பாதுகாப்புக்கு எந்த நாடும் அச்சுறுத்தலாக இல்லை – ஹிஷாமுடின்

மலேசியாவின் பாதுகாப்புக்கு எந்த நாடும் அச்சுறுத்தலாக இல்லை – ஹிஷாமுடின்

483
0
SHARE
Ad

hisham

கோலாலம்பூர், மே 28 – தேசிய பாதுகாப்புக்கு எந்த நாட்டிடம் இருந்தும் அச்சுறுத்தல் இல்லை என தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் தெரிவித்துள்ளார்.

தேசிய தற்காப்பு கொள்கை மற்றும் தேசிய ராணுவ வியூகம் ஆகியவற்றின் அடிப்படையில் மலேசியாவுக்கு எந்த நாடும் அச்சுறுத்தலாக இருப்பதாக தற்காப்பு அமைச்சு கருதவில்லை என புதன்கிழமை அவர் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

“அதேவேளையில் நாட்டின் தற்காப்பு தொடர்பில், அண்டை நாடுகள் சிலவற்றுடனான விவகாரங்களை மலேசியா சாமர்த்தியமாக கையாள வேண்டியுள்ளது. தென் சீனக் கடல் விவகாரம் மற்றும் எல்லை இறையாண்மை குறித்த விவகாரங்கள் இன்னும் தீர்க்கப்பட வேண்டி உள்ளன,” என்று தும்பாட் தொகுதி பாஸ் உறுப்பினர் டத்தோ கமாருடின் ஜாஃபர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் ஹிஷாமுடின் குறிப்பிட்டுள்ளார்.

“இத்தகைய விவகாரங்களை ராணுவ ரீதியிலான ராஜதந்திர உறவுகளின் மூலம் எதிர்கொள்ள தற்காப்பு அமைச்சும், ராணுவமும் தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், ராணுவத்தின் பலம் என்பது அச்சுறுத்தலின் அடிப்படையிலானது அல்ல என்றும், செயல்திறனின் அடிப்படையிலானது என்றும் தெரிவித்துள்ளார்.

“ராணுவத்தின் செயல்திறன் உச்சத்தில் உள்ளது. எத்தகைய அச்சுறுத்தலையும் எதிர்கொள்வதற்கும், நாட்டின் பாதுகாப்பையும் இறையாண்மையையும் உறுதி செய்யவும் ராணுவம் தயாராக உள்ளது,” என்று ஹிஷாமுடின் மேலும் கூறியுள்ளார்.

முன்னதாக, மலேசியாவின் பாதுகாப்பிற்கு எந்த நாடு மிகவும் அச்சுறுத்தலாக உள்ளது என கமாருடின் கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.