Home உலகம் உலகின் குட்டி பேரழகியாக 10 வயது உக்ரைன் சிறுமி தேர்வு!

உலகின் குட்டி பேரழகியாக 10 வயது உக்ரைன் சிறுமி தேர்வு!

725
0
SHARE
Ad

Anna_showing_her_love_for_natureகீவ், மே 28 – வடமேற்கு உக்ரைனை சேர்ந்த 10 வயது சிறுமி உலகின் குட்டி பேரழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். உக்ரைனின் லட்ஸ்க் நகரை சேர்ந்த 10 வயது சிறுமியான அன்னா கிலிமோவெட்ஸ்,

ரஷ்யாவின் புகழ்மிக்க சமூக வலைத்தளமான ‘விகொண்ட்டாக்டே’ மூலம் துருக்கி நாட்டின் போட்ரம் நகரில் நடைபெற்ற உலகின் குட்டி அழகுராணி போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார்.

World_Juniorஒழுக்கம், பாரம்பரிய உடை மற்றும் நவநாகரிக உடை அணியும் நேர்த்தி, அறிவுத்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் கடந்த 10 நாட்களாக சமூக வலைத்தளம் மூலம் நடத்தப்பட்ட இந்தப் போட்டியில்,

#TamilSchoolmychoice

World Junior, Arseny Magega,உக்ரைனை சேர்ந்த அன்னா கிலிமோவெட்ஸ், முதலிடத்தை பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதேபோல், உலகின் குட்டி ஆணழகன் பட்டத்தையும் உக்ரைனின் டெர்னோபில் பகுதியை சேர்ந்த அர்சேனி மகேகா என்ற சிறுவன் தட்டிச்சென்றுள்ளான்.