Home கலை உலகம் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடுவேன் – நடிகர் விஷால்!

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடுவேன் – நடிகர் விஷால்!

613
0
SHARE
Ad

vishal,புதுக்கோட்டை, மே 28 – தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடுவேன் என புதுக்கோட்டையில் ‘முத்தமிழ் நாடக நடிகர் சங்கக்’ கூட்டத்தில் நடிகர் விஷால் கூறினார். புதுக்கோட்டையில் உள்ள முத்தமிழ் நாடக நடிகர் சங்கத்திற்கு நடிகர்கள் விஷால், கர்ணாஸ் ஆகியோர் நேற்று வந்தனர்.

பின்னர் அவர்கள் நாடக நடிகர்கள் சங்க உறுப்பினர்களிடம் கலந்துரையாடினார். அப்போது விஷால் பேசுகையில்; “தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம் விரைவில் கட்டப்படும் என கடந்த 2010–ஆம் ஆண்டு முதல் தென்னிந்திய நடிகர் சங்க பொறுப்பாளர்கள் பேசி வருகின்றனர்”.

“ஆனால் அதற்குண்டான நடவடிக்கைகளை அவர்கள் எடுக்கவில்லை. மேலும் கட்டிடம் உள்ள இடத்தை ஒரு தனியார் திரைப்பட நிறுவனத்திற்கு 30 ஆண்டு கால குத்தகைக்கு விட்டு உள்ளனர்”.

#TamilSchoolmychoice

“தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்ட வேண்டும் என்று இளம் திரைப்பட கலைஞர்கள் விருப்பம் தெரிவித்தும், பொறுப்பாளர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இது குறித்து நாடக நடிகர்களிடம் எடுத்து கூறுவதற்காகவே தற்போது நான் புதுக்கோட்டைக்கு வந்து உள்ளேன்” என்றார்.

பின்னர் நடிகர் விஷால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– “கடந்த முறை நடந்த தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தலைவர் சரத்குமார் மற்றும் பொது செயலாளர் ராதாரவி ஆகியோர் நடிகர் சங்க கட்டிடம் அடுத்த ஆண்டிற்குள் கட்டப்படும் என்று அறிவித்தனர்”.

“ஆனால் இதுநாள் வரை கட்டுமான பணிகள் நடந்ததாக தெரியவில்லை. எனவே தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலுக்குள் நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் அறிவித்தால், நாங்கள் தேர்தலில் போட்டியிட மாட்டோம்”.

“அறிவிக்கவில்லை என்றால் வேறு வழியில்லாமல் நாங்கள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று கட்டிடம் கட்டுவதற்கான நடவடிக்கைகளை எடுப்போம். மேலும் தேர்தலில் நிற்பதற்கும் நாங்கள் தயாராக உள்ளோம்” என விஷால் கூறினார்.