Home நாடு இஸ்மாயில் சாப்ரி துணைப் பிரதமர் – ஹிஷாமுடின் மூத்த அமைச்சர்

இஸ்மாயில் சாப்ரி துணைப் பிரதமர் – ஹிஷாமுடின் மூத்த அமைச்சர்

1035
0
SHARE
Ad
இஸ்மாயில் சப்ரி யாக்கோப் – கோப்புப் படம்

புத்ரா ஜெயா : நடப்பு தற்காப்பு அமைச்சரும் தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சருமான இஸ்மாயில் சாப்ரி துணைப் பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

நடப்பு வெளியுறவு அமைச்சரான ஹிஷாமுடின் ஹூசேன் ஓன் தொடர்ந்து அதே அமைச்சுப் பொறுப்பில் தொடர்வார். அதே வேளையில் மூத்த அமைச்சராகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இந்த அமைச்சரவை மாற்றங்கள் மாமன்னருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளன என்றும் இந்த மாற்றங்கள் உடனடியாக அமுலுக்கு வருகின்றன என்றும் பிரதமர் துறை அலுவலகத்தின் அறிக்கை வெளியிட்டது.

#TamilSchoolmychoice

இன்று புதன்கிழமை (ஜூலை 7) இரவு தேசியக் கூட்டணியில் தொடர்வதா அல்லது வெளியேறுவதா என்ற முடிவை அம்னோ உச்சமன்றம் எடுக்கவிருந்த நிலையில் எதிர்பாராத திருப்பமாக மொகிதின் யாசின் இந்தப் புதிய அமைச்சரவை மாற்றங்களை அறிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து அம்னோ தொடர்ந்து தேசியக் கூட்டணியில் நீடிக்குமா அல்லது வெளியேறுமா என்பது இன்று இரவு அம்னோ உச்சமன்றக் கூட்டத்திற்குப் பின்னர் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.