Home நாடு தேசியக் கூட்டணியிலிருந்து அம்னோ வெளியேறுகிறது! மொகிதின் பதவி விலக வேண்டும் என்றும் கோரிக்கை!

தேசியக் கூட்டணியிலிருந்து அம்னோ வெளியேறுகிறது! மொகிதின் பதவி விலக வேண்டும் என்றும் கோரிக்கை!

1007
0
SHARE
Ad

கோலாலம்பூர் : புதன்கிழமை (ஜூலை 7) இரவு நடைபெற்ற அம்னோ உச்சமன்றக் கூட்டம் ஆளும் தேசியக் கூட்டணியின் பிரதமர் மொகிதின் யாசினுக்கு இனி ஆதரவு தருவதில்லை என்றும், தேசியக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாகவும் அதிகாரபூர்வ முடிவெடுத்திருக்கிறது.

இரவு 8.30 மணி தொடங்கி இயங்கலை வழி நடத்தப்பட்ட அம்னோ உச்சமன்றக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

தேசியக் கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவு உடனடியாக அமுலுக்கு வருவதாகவும் அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹாமிடி தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

கடந்த 2020-ஆம் ஆண்டு மார்ச் 11-ஆம் தேதி அம்னோ உச்சமன்றம் நிர்ணயித்த 7 நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய மொகிதின் யாசின் தவறி விட்டதால் தங்களின் ஆதரவை மீட்டுக் கொள்வதாக சாஹிட் ஹாமிடி தெரிவித்தார்.

மொகிதின் யாசின் பிரதமர் பதவியிலிருந்து விலகி இடைக்காலப் பிரதமர் ஒருவர் நியமிக்கப்பட வழிவிட வேண்டும் என்றும் சாஹிட் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து பரபரப்பான அரசியல் திருப்பங்கள் நேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.