Home இந்தியா செஸ் ஒலிம்பியாட் : தொடக்கி வைத்தார் மோடி

செஸ் ஒலிம்பியாட் : தொடக்கி வைத்தார் மோடி

843
0
SHARE
Ad

சென்னை : இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் பிரம்மாண்டமான விழாவில் தொடக்கி வைத்தார்.

இதே நிகழ்ச்சியில் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் உரையாற்றினார்.

தனதுரையில் வழக்கம்போல் திருக்குறளை மேற்கோள் காட்டி மோடி பேசினார்.

#TamilSchoolmychoice

28 ஜூலை 2022 தொடங்கி 10 ஆகஸ்ட் 2022 வரை தமிழ் நாட்டின் மகாபலிபுரம் நகரில் செஸ் ஒலிம்பியாட் நடைபெறுகிறது.

இந்த அனைத்துலகப் போட்டியால் அருகிலிருக்கும் சென்னையும் களை கட்டத் தொடங்கியிருக்கிறது. 186 நாடுகளில் இருந்து 1,700-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் இந்தப் போட்டியில் பங்கு பெறுகிறார்கள்.

செஸ் போட்டிகளுக்கான வரவேற்புப் பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் அமைத்திருக்கிறார்.

இந்தியாவிலேயே இத்தகைய போட்டி நடைபெறுவது இதுதான் முதன் முறை என்பதால் அனைத்துலகப் பார்வை இப்போது சென்னையின் மீது பதிந்திருக்கிறது.