Home நாடு ஸ்குவாஷ் : ஆசியப் போட்டிகளில் மலேசியாவுக்கு தங்கம் பெற்றுத் தந்த சிவசங்கரி

ஸ்குவாஷ் : ஆசியப் போட்டிகளில் மலேசியாவுக்கு தங்கம் பெற்றுத் தந்த சிவசங்கரி

382
0
SHARE
Ad
சிவசங்கரி (கோப்புப் படம்)

பெய்ஜிங் : இங்கு நடைபெற்று வரும் ஆசியப் போட்டிகளில் ஸ்குவாஷ் விளையாட்டில் மலேசியாவின் எஸ்.சிவசங்கரி அபார வெற்றி பெற்று நாட்டிற்கு தங்கம் வெற்றி பெற்றுத் தந்தார்.

கெடா மாநிலத்தைச் சேர்ந்தவரான சிவசங்கரி, இறுதிப் போட்டியில் ஹாங்காங் விளையாட்டாளரைத் தோற்கடித்து இந்த வெற்றியைப் பெற்றார். மலேசியாவுக்கு கிடைத்திருக்கும் 4-வது தங்கம் இதுவாகும்.

இதற்கு முன்னர் ஸ்குவாஷ் விளையாட்டுப் போட்டிகளில் டத்தோ நிக்கோல் டேவிட்தான் முன்னணி வகித்தார். 1998 முதல் 2018 வரையில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 5 தங்கப் பதக்கங்களை நிக்கோல் மலேசியாவுக்குப் பெற்றுத் தந்தார்.

#TamilSchoolmychoice

அவருக்குப் பின்னர் இப்போது சிவசங்கரி ஸ்குவாஷ் போட்டிகளில் தங்கப் பதக்கங்களைப் பெற்றுத் தரும் படலத்தைத் தொடங்கியுள்ளார்.