Home நாடு எட்மண்ட் சந்தாரா மஇகாவில் இணைகிறாரா?

எட்மண்ட் சந்தாரா மஇகாவில் இணைகிறாரா?

615
0
SHARE
Ad

கோலாலம்பூர் : அண்மையில் பெர்சாத்து கட்சியில் இருந்து விலகியிருப்பதாக அறிவித்திருக்கும் சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எட்மண்ட் சந்தாரா, அடுத்து எந்த கட்சியில் இணைவார் என்ற ஆரூடங்கள் கூறப்பட்டு வருகின்றன.

அவர் மஇகாவில் இணையக் கூடும் என்றும் அதன் மூலம் தேசிய முன்னணி கூட்டணியில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்வார் என்றும் மஇகா வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த பல தவணைகளாக சிகாமாட் தொகுதியில் மஇகா போட்டியிட்டு வெற்றி பெற்று வந்திருக்கிறது.

#TamilSchoolmychoice

கடந்த 2018 பொதுத் தேர்தலில் முதன் முறையாக பிகேஆர் கட்சி சார்பில் அங்கு போட்டியிட்ட எட்மண்ட் சந்தாரா, அப்போதைய நடப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான டான்ஸ்ரீ டாக்டர் சுப்ரமணியத்தைத் தோற்கடித்தார்.

அடுத்த பொதுத் தேர்தலில் சிகாமாட் தொகுதி மீண்டும் மஇகாவுக்கு ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மசீசவும் அம்னோவும் கூட அந்தத் தொகுதியில் போட்டியிட ஆர்வம் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் மஇகாவில் எட்மண்ட் சந்தாரா இணைந்தால் சிகாமாட் தொகுதியின் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினரான அவருக்கே அந்தத் தொகுதி மீண்டும் ஒதுக்கப்படும் வாய்ப்பு உள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.