Home இந்தியா திமுக தலைமையிலான கூட்டணி தொடரும் – ஸ்டாலின் உறுதி

திமுக தலைமையிலான கூட்டணி தொடரும் – ஸ்டாலின் உறுதி

640
0
SHARE
Ad

சென்னை : செஸ் ஒலிம்பியாட் போட்டிகளைத் தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்த போது அவருடன் முதல்வர் ஸ்டாலின் பாராட்டிய நெருக்கத்தைக் கண்டு தமிழ் நாடு ஊடகங்கள் பல்வேறு ஆரூடங்களைக் கிளப்பியிருந்தன.

அதைத் தொடர்ந்து எழுந்த ஐயப்பாடுகளை நீக்கும் வண்ணம் திமுக தலைமையிலான கூட்டணி தமிழ்நாட்டில் தொடரும் என ஸ்டாலின் விளக்கம் அளித்திருக்கிறார்.

கேரள மாநிலம் திருச்சூரில் மனோரமா நியூஸ் நடத்தும் கான்க்ளேவ் கருத்தரங்கில் காணொலி ஸ்டாலின் உரை நிகழ்த்தினார்.

#TamilSchoolmychoice

தமிழகத்தில் திமுகவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடனான ஆரோக்கியமான கூட்டணி நீடிப்பதாக ஸ்டாலின் கூறியிருக்கிறார். இதன் மூலம் காங்கிரசுடனான கூட்டணியும் தொடரும் என மறைமுகமாகச் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

“இந்தியா என்பது கூட்டாட்சி கோட்பாட்டை மதித்து நடக்க வேண்டும்; ஆனால், அதற்கு எதிரான செயல்கள் நடைபெறுகின்றன. நாடாளுமன்றத்தில் முக்கிய விவகாரங்கள் குறித்து பேசுவதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. மாநிலங்கள் சுயமாக தன்னிறைவு பெற்றவையாக இருப்பது தான் இந்தியாவிற்கு பலம் ஆகும். இந்தியாவுக்கு ஒரே ஒரு தேசிய மொழி என்பது எப்போதும் சாத்தியமில்லை. ஒரே நாடு, ஒரே மொழி என்போர், நாட்டின் எதிரிகள்” எனவும் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.