Home உலகம் ரோஹின்ய முஸ்லிம்களுக்கு எதிரான போக்கை கைவிடுங்கள் – மியான்மருக்கு ஒபாமா கண்டிப்பு!

ரோஹின்ய முஸ்லிம்களுக்கு எதிரான போக்கை கைவிடுங்கள் – மியான்மருக்கு ஒபாமா கண்டிப்பு!

442
0
SHARE
Ad

obamaவாஷிங்டன், ஜூன் 3 – பல ஆண்டுகளாக ராணுவத்தின் பிடியிலிருந்து ஜனநாயக ஆட்சிக்கு முன்னேறிச் செல்லும் மியான்மர், சிறுபான்மையின ரோஹின்ய முஸ்லிம்களுக்கு எதிரான போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.

ராணுவ அடக்கு முறையால பல ஆண்டுகளாக ஆட்சி செய்யப்பட்டு வந்த மியான்மரில், 2011-ஆம் ஆண்டு நிகழ்ந்த மாற்றத்திலும் ஜனநாயக போக்குக்கும் அமெரிக்க அதிபர் ஒபாமா ஆதரவு அளித்து வந்தார்.

இந்த நிலையில் தற்போது ஜனநாயகத்துக்கு எதிராக ரோஹின்ய முஸ்லிம் மக்களிடம் மியான்மர் அரசு காட்டும் போக்கை அமெரிக்க அதிபர் ஒபாமா கடுமையாக கண்டித்துள்ளார்.

#TamilSchoolmychoice

தென்கிழக்கு ஆசிய நாடுகளின் தலைவர்கள் வாஷிங்டனில் ஒபாமாவை சந்தித்து இது குறித்து பேசினார். அப்போது பேசிய ஒபாமா;- ” ஜனநாயக கொள்கையில் மியான்மர் வெற்றி பெற வேண்டுமானால், ரோஹின்ய மக்கள்மீது பாரபட்சம் காட்டும் போக்கை அவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்”.

“நான் ஒரு ரோஹின்ய இனத்தவராக இருந்திருந்தால், நான் பிறந்த இடத்தில் வாழ்வதையே விரும்புவேன். ஆனால் எனது அரசு என்னை பாதுகாக்கவும் எனது மக்கள் என்னை சகோதரத்துவத்தோடு நடத்தவில்லை என்றால் அது எனது வாழ்வாதாரத்தை பாதிக்க செய்யும்”.

“ரோஹின்ய மக்களின் பிரச்சினையும் இதுதான். இது ஏன் முக்கியம் என்றால், ஜனநாயக பாதைக்கு திரும்புவதற்கு, ரோஹின்ய மக்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பது கவனத்தில் கொள்ளப்படவேண்டியது” என்று கூறினார் ஒபாமா.

மேற்கு மியான்மரில் சுமார் 13 லட்சம் சிறுபான்மையின ரோஹின்ய மக்கள் வாழ்கின்றனர். இவர்களுக்கு அந்நாட்டில் பெரும்பாலும் குடியுரிமை மறுக்கப்படுகிறது.

இவர்கள் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து குடியேறியவர்கள் என்றும் வங்கதேசத்தவர்கள் என்றும் மியான்மர் தரப்பினர் குறிப்பிடுவதால் இவர்களுக்கு சிறுபான்மையின அந்தஸ்த்தை வழங்க அந்நாடு மறுக்கிறது.

இதனால் அவர்களது வாழ்வாதாரத்துக்கு பிரச்சினை நிலவுகிறது. தேசிய மக்கள் தொகை கணக்கீட்டிலும் இவர்கள் இணைக்கப்படாததால், போக்குவரத்து கட்டுப்பாடுகள், வேலை வாய்ப்பு என,

பல பிரிச்சினைகளுக்கு ஆளாகி கடல் வழியாக பக்கத்து நாடுகளான மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கு ஆபத்தான நிலையில் பயணித்து உயிரிழப்புக்கும் துன்புறுத்தலுக்கும் ஆளாகின்றனர்.