Home One Line P2 269 ரோஹின்யாக்களை வங்காளதேசம் திரும்பப் பெற்றுக்கொள்ளாது

269 ரோஹின்யாக்களை வங்காளதேசம் திரும்பப் பெற்றுக்கொள்ளாது

916
0
SHARE
Ad

டாக்கா: அண்மையில் லங்காவியில் கைது செய்யப்பட்ட 269 ரோஹின்யாக்களை மீண்டும் தாங்கள் பெற்றுக் கொள்ளப் போவதில்லை என்று வங்காளதேசம் தெரிவித்துள்ளது.

“வங்காளதேசம் அவர்களை மீண்டும் திரும்பப் பெற்றுக் கொள்ளாது. அவ்வாறு செய்வதற்கான கட்டாயமும், நிலையிலும் நாங்கள் இல்லை.” என்று அதன் வெளியுறவு அமைச்சர் ஏகெ அப்துல் மொமின் கூறினார்.

#TamilSchoolmychoice

முன்னதாக திங்கட்கிழமை மலேசிய அமலாக்கப் பிரிவினர் 269 ரோஹின்யாக்களை கைது செய்தனர். கண்டுபிடிக்கப்பட்ட படகின் இயந்திரம் வேண்டுமனே சேதப்படுத்தப்பட்டதாகவும், படகு துளையிடப்பட்டதாகவும் அமலாக்கப் பிரிவினர் தெரிவித்தனர்.
ஒரு பெண்ணின் சடலமும் அப்படகில் கண்டெடுக்கப்பட்டது.

வங்காளதேசத்தின் மக்கள் இல்லை என்றும் அவர்கள் மியான்மர் நாட்டின் மக்கள் என்றும் அது கூறியது.

உலகின் பிற நாடுகளும் ரோஹின்யாக்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அது தெரிவித்துள்ளது. அவர்கள் தனியே இந்த பாரத்தை சுமக்க வேண்டிய அவசியமில்லை என்றும் மொமின் தெரிவித்துள்ளார்.

“நாட்டிலுள்ள 1.1 மில்லியன் ரோஹின்யாக்கள் தங்கள் நாடுகளுக்கு அழைத்துச் செல்ல நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.