Home One Line P2 பெட்ரோல், டீசல் விலைக் கட்டுப்பாட்டு உத்தரவு நீக்கப்பட்டது

பெட்ரோல், டீசல் விலைக் கட்டுப்பாட்டு உத்தரவு நீக்கப்பட்டது

837
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ரோன்95 பெட்ரோலை லிட்டருக்கு 2.08 ரிங்கிட்டாகவும், டீசலை லிட்டருக்கு 2.14 ரிங்கிட்டாகவும் கட்டுப்படுத்திய விலைக் கட்டுப்பாட்டு உத்தரவை உள்நாட்டு வணிக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சகம் இரத்து செய்துள்ளது.

இந்த உத்தரவு ஜூன் 3-ஆம் தேதியிட்ட அரசாங்கப் பதிவேட்டில் அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் உள்நாட்டு வணிக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சர் டத்தோ அலெக்சாண்டர் நந்தா டிங்கி ஏப்ரல் 10 அன்று இதற்கு ஒப்புதல் அளித்தார்.

“விலைக் கட்டுப்பாடு மற்றும் இலாப உயர்வு கட்டுப்பாடு (பெட்ரோல் மற்றும் டீசலுக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்தல்) இரத்து செய்யப்படுகிறது. ” என்றும் அரசாங்கப் பதிவேட்டில் கூறப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

நம்பிக்கைக் கூட்டணி, முன்னர் உலகளாவிய எண்ணெய் விலை அளவைப் பொருட்படுத்தாமல் ரோன்95 மற்றும் டீசலுக்கான அதிகபட்ச சில்லறை விலையை கட்டுப்படுத்திய பின்னர் விலை உச்சவரம்பு அறிமுகப்படுத்தப்பட்டது.