Home இந்தியா செட்டிநாடு குழுமம் வருமான வரிச் சோதனையில் சிக்கியது!

செட்டிநாடு குழுமம் வருமான வரிச் சோதனையில் சிக்கியது!

638
0
SHARE
Ad

setti2

சென்னை- ஜுன் 10- தமிழ்நாட்டில் மிகவும் பாரம்பரியம் மிக்கது செட்டிநாடு அண்ணாமலையார் குடும்பம்.இந்தக் குடும்பத்தின் நிர்வாகத்தினைச் செட்டிநாடு குழுமம் என்பர்.

இந்தக் குழுமத்திற்குச் சொந்தமாகத் தமிழ்நாடு, மும்பை உள்ளிட்ட பல பகுதிகளில் சிமெண்ட் ஆலை, பல்கலைக் கழகம், மருத்துவக் கல்லூரிகள், மருத்துவ மனைகள்  உள்ளிட்ட பல நிறுவனங்கள் உள்ளன.

#TamilSchoolmychoice

கடந்த சில மாதங்களாகச் செட்டிநாடு குழும சொத்து விவகாரத்தில், தொழிலதிபர் எம்ஏஎம் ராமசாமிக்கும், அவரது வளர்ப்பு மகனான முத்தையா என்கிற அய்யப்பனுக்கும் பலத்த மோதல் நடந்து வருகிறது.

“அய்யப்பனின் சுவிகாரத்தை நான் ரத்து செய்துவிட்டேன்; அவன் இப்போது என் வளப்பு மகன் அல்ல;அவன் என்னை ஏமாற்றிப் பல சொத்துக்களைப் பறித்துக் கொண்டான். அவனுக்கு இனி என் சொத்துக்களில் எந்தப் பாத்தியதையும் இல்லை” என்று எம் ஏ எம் ராமசாமி கூறி வருகிறார்.

“சுவீகாரம் ரத்தாகவில்லை; இப்போதும் நிர்வாகம் என் கட்டுப்பாடில் தான் உள்ளது.இதை நான் சட்டப்பூர்வமாகச் சந்திப்பேன்” என்று அய்யப்பன் கூறி வருகிறார்.

இந்நிலையில், கடந்த 6 வருட காலமாக முறையாக வருமான வரி ஏதும் செலுத்தவில்லை என்று கூறி, தமிழகத்தில் 35 இடங்களிலும், ஆந்திரா மற்றும் மும்பை ஆகிய நகரங்களிலும் இன்று காலை 8 மணி முதல் ஒரே நேரத்தில் வருமான வரித்துறையினர் தீவிர சோதனை நடத்தினர்.

வருமான வரிச் சோதனையில் சிக்கிய ஆவணங்கள் பற்றிய செய்திகள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.