Home இந்தியா மாயமான சிறிய விமானத்தைக் கண்டுபிடிக்க ‘இஸ்ரோ’ உதவி!

மாயமான சிறிய விமானத்தைக் கண்டுபிடிக்க ‘இஸ்ரோ’ உதவி!

469
0
SHARE
Ad

vimaanamபுதுடில்லி, ஜூன்10- ‘ஆம்லா ஆபரேஷன்’ ஒத்திகைக்குச் சென்ற போது  3 விமானிகளுடன் மாயமான டார்னியர் விமானத்தைத் தேடுவதற்கு இஸ்ரோவிடம் உதவி கேட்கப் பட்டுள்ளது.

கடைசியாக  அந்த விமானம் சிதம்பரத்தில் இருந்து 16 கடல் மைல் தொலைவில் கிழக்குத் திசையில் பறந்து கொண்டிருந்ததாகத் திருச்சியில் உள்ள ரேடார் கருவியில் பதிவாகியுள்ளது.

மாயமான விமானத்தைத் தேடும் பணி முழு வீச்சில்  பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், காணாமல் போன டார்னியர் விமானத்தைத் தேடுவதற்கு இஸ்ரோவிடமும் உதவி கேட்கப் பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

பெங்களூருவில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தின் உதவியுடன் விமானத்தின் சிக்னலைக் கண்டறிய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஒருவேளை, கடலில் விழுந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப் படுகிறது. எனவே, விசாகப்பட்டிணத்திலிருந்து கப்பற்படையின் நீர்மூழ்கிக் கப்பல் மூலமும் விமானம் தேடப்பட உள்ளது.

நீர்மூழ்கிக் கப்பல் மூலம் தேடும் பணி இன்று மாலைக்குள் துவங்கப்படும் எனக் கடலோரப் பாதுகாப்புப் படையின் கிழக்குப் பிராந்திய ஐ.ஜி.ஷர்மா தெரிவித்துள்ளார்.