Home இந்தியா மும்பையில் அலங்காரக் குதிரை வண்டிகளுக்குத் தடை!

மும்பையில் அலங்காரக் குதிரை வண்டிகளுக்குத் தடை!

620
0
SHARE
Ad

Horse-carriage-Mumbai

மும்பை, ஜூன் 10- மேற்கண்ட படத்தில் ஒரு குதிரை வண்டிக்காரன்,விக்டோரியா ராணி காலத்தைப் போலஅலங்கரிக்கப்பட குதிரை  வண்டி மீது அமர்ந்திருப்பதைப் பார்க்கிறீர்கள். இது மும்பையில் நேற்று இரவு எடுக்கப்பட்ட படம்.

அவன் இரவு நேரத்தில் சுற்றுலாப் பயணிகளை உல்லாசமாக மும்பையைச் சுற்றிக் காட்டிப் பணம் சம்பாதிப்பதற்காகக் காத்திருக்கிறான்.

#TamilSchoolmychoice

ஆனால், இத்தகைய குதிரை வண்டிகளை வட்டார உயர்நீதி மன்றம் தடை செய்துள்ளது. அதோடு, ஓராண்டுக்குள் இந்தக் குதிரை வண்டிகளை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இச்செய்தி அங்குள்ள ஊடகங்களில் ஜூன் 9-ஆம் தேதி வெளியாகியிருக்கிறது.

இதனால் வருமான இழப்புக்கு உள்ளான குதிரை வண்டிச் சவாரி வியாபாரிகளாகிய 700 குடும்பங்களுக்கு இழப்பீடு தந்து, குதிரைகளை மட்டும் அவர்கள் பராமரிக்கவும் வேறு தொழில் செய்து பிழைப்பதற்கும் ஆவன செய்து மும்பை அரசு அவர்களுக்கு உதவ வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.