மும்பை, ஜூன் 23- மும்பையில் இன்று காலை முதல் மீண்டும் கனமழை பெய்து வருவதால் விமானம் மற்றும் தொடர்வண்டிப் போக்குவரத்தில் பெரிதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த வெள்ளியன்று 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் கொட்டிய மழையால், மும்பை நகரமே முற்றிலுமாக முடங்கியது.
தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டது. பேருந்துகள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. விமானங்களும் தாமதமாகச் சென்றன. நகரின் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அதேபோல் மீண்டும் இன்று கனமழை பெய்யத் தொடங்கிவிட்டது.
தண்டவாளங்கள் தண்ணீரில் மூழ்கியதால், தொடர்வண்டிகள் புறப்பாடு தாமதமானது.
இதனிடையே தாதர் அருகே உயரழுத்த மின் கம்பி தண்டவாளத்தில் அறுந்து விழுந்ததில், புறநகர் சாதாரணத் தொடர் வண்டிகள், விரைவுத் தொடர்வண்டிப் பாதையில் இயக்கப்பட்டன.
இதே போல் விமானங்கள் புறப்பாடும் 20 நிமிடங்களுக்கும் மேல் தாமதமானது.