Actor santhanam.com என்பது தான் அந்த இணையதளம். இந்த இணையதளம் மூலம் சந்தானம் பற்றிய அனைத்துத் தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம். அவர் நடித்த படங்கள், நடிக்கப் போகும் படங்கள், தயாரிக்கும் படங்கள் என்று அவர் தொடர்பான எல்லாத் தகவல்களும் இதில் கிடைக்கும்,
கதாநாயகனாகத் தொடர்ந்து நடிக்கத் தீர்மானித்துள்ள சந்தானம், தனது படங்களை இணையத்தில் இன்னும் விரிவாக விளம்பரப்படுத்த முடியும் என்கிற நம்பிக்கையில் இந்த இணையதளத்தைத் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது.
இனி, சந்தானத்தின் புதிய படம் குறித்த தகவல்களும் இந்த இணையதளம் மூலமாகவே வெளியிடப்படுமாம்.