Home இந்தியா ஜெயலலிதா விடுதலையை எதிர்த்துக் கர்நாடகா இன்று மேல்முறையீடு செய்தது.

ஜெயலலிதா விடுதலையை எதிர்த்துக் கர்நாடகா இன்று மேல்முறையீடு செய்தது.

581
0
SHARE
Ad

jayalalithaaபுதுடெல்லி, ஜூன் 23- சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உட்பட நான்கு பேரின் விடுதலையை எதிர்த்துக் கர்நாடகா அரசு, உச்ச நீதிமன்றத்தில் இன்று சுமார் 2400 பக்கங்கள் கொண்ட மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது.

இந்த மேல்முறையீட்டு மனுவைக் கர்நாடகா அரசு சார்பில் வழக்கறிஞர்  அரிஸ்டாட்டில்   தாக்கல் செய்தார்.

இந்த மனுவின் சாராம்சம் பின்வருமாறு:

#TamilSchoolmychoice

“ஜெயலலிதா உள்ளிட்டோரை விடுதலை செய்தது சட்டவிரோதமானது; இந்தத் தீர்ப்பு செல்லாது.

இந்த வழக்கின் ஒருதரப்பான கர்நாடகா அரசை ஜெயலலிதா உள்ளிட்டோர் தங்களது மேல்முறையீட்டு மனுவில் சேர்க்கவில்லை.

அரசு வழக்கறிஞரான பவானிசிங்கை உச்சநீதிமன்றம் நீக்கிய நிலையில், கர்நாடகா அரசுத் தரப்பு வழக்கறிஞர் தமது வாதங்களை முன்வைக்கப் போதிய அவகாசம் தரப்படவில்லை.

எனவே, கர்நாடக உயர்நீதிமன்றத் தீர்ப்புக்குத் தடைவிதிக்க வேண்டும்.” எனக் கூறப்பட்டுள்ளது.

இம்மனு ஜூலை முதல் வாரத்தில் விசாரணைக்கு வரக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.